×
Saravana Stores

சபர்மதி ரிப்போர்ட் படம் பார்த்த பிரதமர் மோடி


புதுடெல்லி: நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள், அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து பிரதமர் மோடி நேற்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தைப் பார்த்தார். மூத்த நடிகர் ஜிதேந்திரா, நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, நடிகை ராஷி கண்ணா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி பார்த்தார். பிரதமரான பிறகு முதல்முறையாக இந்த படத்தைத்தான் பார்த்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மோடியுடன் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, ஜிதன் ராம் மஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சபர்மதி ரிப்போர்ட் படம் பார்த்த பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Godhra train ,Balayogi Auditorium ,Library ,Jitendra ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியுடன் ஹேமந்த் சோரன்...