×
Saravana Stores

கடந்த நவம்பர் மாதத்தில் உற்பத்தித்துறை வளர்ச்சி 56 புள்ளிகளாக சரிந்தது


புதுடெல்லி: நாட்டின் உற்பத்தி துறை வளர்ச்சி, பிஎம்ஐ குறியீடு மூலம் அளவிடப்படுகிறது. பிஎம்ஐ குறியீடு குறைந்தால், தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ளதாக கொள்ளலாம். கடந்த நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி வளர்ச்சியை குறித்த ஆய்வறிக்கையை எச்எஸ்பிசி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி துறை பிஎம்ஐ குறியீடு 56.5 என குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் இந்த குறியீடு 57.5 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் உற்பத்தி குறைந்துள்ளதை அறிய முடிகிறது. மேலும், இந்த சரிவு, 11 மாதங்களில் இல்லாத அளவாகும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post கடந்த நவம்பர் மாதத்தில் உற்பத்தித்துறை வளர்ச்சி 56 புள்ளிகளாக சரிந்தது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,HSBC ,Dinakaran ,
× RELATED ஜாமீன் மனு நிராகரிக்கும் போது விசாரணை...