- ஊட்டி மலை ரயில்
- மேட்டுப்பளையம்
- மலை
- கோவாய் மாவட்டம்
- நீலகிரி மாவட்டம்
- ஊட்டி
- கேரளா
- கர்நாடக
- ஆந்திரா
- யுனெஸ்கோ
- தின மலர்
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சிறப்பு வாய்ந்த மலை ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலை ரயிலில் பயணம் செய்ய கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு தொடர் கனமழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர் கன மழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (திங்கள்) முதல் வரும் 4ம் தேதி (புதன்) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஊட்டி மலை ரயில் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த தேதிகளில் முன்பதிவு செய்துள்ள சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
The post நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஊட்டி மலை ரயில் 3 நாள் ரத்து appeared first on Dinakaran.