×
Saravana Stores

கர்நாடகாவில் கோர விபத்து.. தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதியதில் 3 பெண்கள் உயிரிழப்பு!!

பெங்களூரு: கர்நாடகாவில் தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கோவாவில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் பெங்களூரு நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிரா தாலுகாவில் உள்ள சிக்கனஹள்ளி மேம்பாலத்தில் இருந்த சாலை தடுப்பில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல, விபத்தில் காயமடைந்தனர்களை மீட்டு அருகில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் ஷெபாலி சிங், உர்வி மற்றும் பிரியங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கர்நாடகாவில் கோர விபத்து.. தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதியதில் 3 பெண்கள் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Goa ,Bengaluru ,Sira Taluga ,
× RELATED எதிர்க்கட்சிகள் முழக்கத்தை தொடர்ந்து...