திண்டுக்கல், டிச. 2: பனிகாலத்தில் காய்ச்சலை தடுக்க தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனி நிலவி வருகிறது. பருவநிலை மாறுபாட்டின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘பருவநிலை மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இவர்களில் காய்ச்சலுக்காக வருபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் தேவையான அளவு மருந்துகள் இருப்பு உள்ளன. காய்ச்சலுக்கு வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சலை தடுக்க சுடு தண்ணீரை பருக வேண்டும். ஆறிய மற்றும் பழைய உணவு வகைகளை உட்கொள்ளக்கூடாது. சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்’’ இவ்வாறு கூறினர்.
The post கொட்டும் பனியால் அதிகரிக்கும் காய்ச்சல் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்: மருத்துவர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.