கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இவரது கடையில் ஜனனி என்பவர் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவர் தன்னை இலங்கை அகதி என்றும், தனக்கு பெற்றோர் இல்லை என்றும் கூறி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமியின் மகனான செந்தில்குமார் (38) ஜனனியுடன் பழகியுள்ளார். மேலும் அவ்வப்போது அவருக்கு பண உதவியும் செய்து வந்துள்ளார். ஆனால் நாளடைவில் ஜனனியை தேடி பல ஆண்கள் கடைக்கு வந்ததால் விஜயலட்சுமி அவரை கண்டித்ததோடு வேலையை விட்டு நிறுத்தி விட்டாராம்.
ஆனால் ஜனனியோ, செந்தில்குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக புகார் கொடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும், கடந்த 23ம் தேதி இரவு விஜயலட்சுமி வீட்டுக்கு ஜனனி மற்றும் சென்னையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சுதாகரன் (42) மற்றும் 2 பேர் சென்று விஜயலட்சுமி, செந்தில் குமாரை தாக்கியதோடு ரூ.50லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜனனி குறித்து செந்தில்குமார் விசாரித்தபோது, அவர் தனியாக இருக்கும் ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பவர் என்றும், இதுபோல் பலரை மிரட்டி பணத்தை அபகரித்ததாகவும், இதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்து பணத்தை அபகரிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட செந்தில்குமார் கடந்த 23ம்தேதி பெட்டவாய்த்தலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஜனனி மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக எஸ்பி வருண்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் எஸ்பி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகரன், ராஜேஸ்குமார் (28), டிசேந்தன் (26) ஆகியோரை நேற்று முன்தினம் பிடித்து பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பின் அவர்களை கைது செய்து நேற்று ஸ்ரீரங்கம் கோட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனனி ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில், செந்தில்குமார் மனைவியிடம் விவாகரத்து பெற்றுவிட்டதாக, தன்னிடம் பொய் சொல்லி, தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், செந்தில்குமாரின் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், நானும் செந்தில்குமாரும் தனிமையில் இருந்த புகைப்படம், வீடியோக்களை காட்டி, அதை சமூக வலைத்தளத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காதல் நாடகம் நடத்தி தாய், மகனை மிரட்டி ரூ.50 லட்சம் கேட்ட நாதக பெண் பிரமுகர்: பல ஆண்களை காதலித்து பணம் பறிப்பு, கொலை மிரட்டல் 3 நிர்வாகிகள் கைது appeared first on Dinakaran.