இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில், மகன் செந்தில்குமார் (46), கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா (40). இவர்கள் குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு செல்வதற்காக செந்தில்குமார் சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு வந்திருந்த நிலையில், தெய்வசிகாமணி, அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக, அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் சிம்கார்டு அங்கேயே இருந்த நிலையில் செல்போன் மாயமாகி உள்ளது. இதனால், செல்போனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அது விலை உயர்ந்த செல்போன் என்பதால் திருடப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே தெய்வசிகாமணி தோட்டத்தில் சாயல்குடியை சேர்ந்த தம்பதி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். அவரது நடவடிக்கை சரியில்லாமல் இருந்ததால் தெய்வசிகாமணி அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதனால் அடிக்கடி அந்த தொழிலாளி வந்து தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தெய்வசிகாமணி தோட்டத்து வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
The post பல்லடம் அருகே 3 பேர் வெட்டிக்கொலை வேலைக்கு வந்த தம்பதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: மேலும் 3 தனிப்படை அமைப்பு, மாயமான செல்போனை தேடும் போலீஸ் appeared first on Dinakaran.