×
Saravana Stores

முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன்: கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை உட்பட மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டு வரும் புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, தற்போது, சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 140 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு மிக அருகில் கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்.

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக அதிகளவு மேக கூட்டங்கள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படுவதால், தற்போதே காற்றுடன் கூடிய அதிக மழை பெய்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்று 90 கி.மீ வேகம் வரை வீசும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதே காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் புயல் கரையைக் கடக்கக் கூடும் என்றும் அந்த நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாருர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று மூடப்பட்டுள்ளன. சென்னை நகருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகளும் இன்று முழுவதும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கிருந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக கலந்துரையாடிய முதல்வர் ஸ்யாலின், புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அறிவுறுத்தல்களை பிறப்பித்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கேஎன் நேரு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். பின்ன அவர் பேசியதாவது; புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன். சென்னையில் இன்றிரவு முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன்: கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,Storm Fengel ,MLA ,State Emergency Disaster Control Centre ,K. Stalin ,Mu. K. Stalin ,
× RELATED புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...