×
Saravana Stores

மேகதாது திட்டம் பிரதமரிடம் சித்தராமையா கோரிக்கை

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் மற்றும் வடகர்நாடக பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக செயல்படுத்த திட்டமிட்டுள்ள கலசா-பண்டூரி நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்தார். மேகதாது அணை திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post மேகதாது திட்டம் பிரதமரிடம் சித்தராமையா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chidharamaiah ,Megathu ,Bangalore ,Karnataka ,Siddaramaiah ,Vice Principal ,D. K. Sivakumar ,Delhi ,Modi ,Megadatu ,Kaviri River ,Chidharamaya ,
× RELATED ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் புதிய...