×
Saravana Stores

நிலக்கரி நிலுவை தொகை ஒன்றிய அரசிடம் ரூ.1.36 லட்சம் கோடி வசூலிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து முதல் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஹேமந்த் சோரன், ஒன்றிய அரசிடம் உள்ள மாநிலத்தின் ரூ.1.36லட்சம் கோடி நிலக்கரி நிலுவை தொகையை பெறுவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2ம் தேதி தனது எக்ஸ் தளத்தில், ‘‘பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஜார்க்கண்ட் வருகிறார்கள். ஜார்க்கண்டிற்கான நிலக்கரி பாக்கி தொகையான ரூ.1.36லட்சம் கோடியை வழங்குமாறு மீண்டும் ஒருமுறை அவர்களை கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post நிலக்கரி நிலுவை தொகை ஒன்றிய அரசிடம் ரூ.1.36 லட்சம் கோடி வசூலிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt: ,Jharkhand ,Chief Minister ,Hemant Soran ,Ranchi ,Union government ,
× RELATED ஜார்க்கண்ட் முதலமைச்சராக 4-வது முறையாக...