திருவனந்தபுரம்: மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளவர் தன்யா மேரி வர்கீஸ். தமிழில் இவர் திருடி, வீரமும் ஈரமும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரும், இவருடைய கணவரான ஜான் ஜேக்கப், இவரது சகோதரர் சாமுவேல் உள்பட 4 பேர் திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகவும், கூடுதல் வட்டி தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. கேரள போலீசால் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. நடிகை தன்யா மேரி வர்கீசுக்கு சொந்தமான திருவனந்தபுரத்தில் உள்ள ரூ.1.56 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
The post மலையாள நடிகையின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.