×

திண்டுக்கல்லில் சட்ட விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல், நவ. 29: திண்டுக்கல்லில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட அளவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்- மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்து முகாமை துவங்கி வைத்தார். கலெக்டர் பூங்கொடி முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் சட்டம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வருவாய் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு பட்டாவும், வேளாண் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு விவசாய உரங்கள்- விதைகளும், உணவுப்பொருள்- வழங்கல் துறை சார்பில் 1 பயனாளிக்கு குடும்ப அட்டையும், வனத்துறை சார்பில் 700 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்- சார்பு நீதிபதி திரிவேணி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கனகராஜ், திண்டுக்கல் வருவாய் கேட்டாட்சியர் சக்திவேல், வட்டாட்சியர் (மேற்கு) ஜெயபிரகாஷ், சமூக நல அலுவலர் புஷ்பகலா மற்றும் வழக்கறிஞர்கள், அனைத் துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post திண்டுக்கல்லில் சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,District Legal Affairs Commission ,District Legal Affairs Committee ,Chairman- ,District ,Principal Judge ,Muthusaratha ,Collector ,Poongodi ,Dinakaran ,
× RELATED திருவாரூரில் 14ம் தேதி லோக் அதாலத்