திருவாரூர், டிச. 8: லோக் அதாலத் எனபடும் மக்கள் நீதிமன்றம் வரும் 14ம் தேதி திருவாரூரில் நடைபெறுவதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொ) முத்துராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றமானது திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வமுத்துகுமாரி உத்தரவின்படி வரும் 14ந் தேதி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் மற்றும் ஜீவனாம்சம், மணமுறிவு மற்றும் மோட்டார் வாகன விபத்து, காசோலை வழக்கு போன்ற வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வுகாணலாம் என்பதால் இதில் வழக்குகளின் வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கு பெற்று வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்து கொள்ள வேண்டும்.மேலும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றமானது நடைபெறவுள்ளது. இவ்வாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொ) முத்துராமன் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூரில் 14ம் தேதி லோக் அதாலத் appeared first on Dinakaran.