திருப்பூர், நவ.29: இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2 ஆண்டுக்கான துணை கலெக்டர் பட்டியல் மற்றும் நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று 3 வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் காரணமாக தேர்தல் பிரிவு அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள் பல அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
The post வருவாய்த்துறையினர் 3வது நாளாக தொடர் போராட்டம் appeared first on Dinakaran.