×
Saravana Stores

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை : சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் காரணமாக இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இளங்கோவன். தற்போது அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

The post உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : EVKS ,Chief Minister ,M.K. ,Elangovan ,Stalin ,Chennai ,Erode ,MLA ,Erode East Congress MLA ,Ilangovan ,Congress party ,Dinakaran ,
× RELATED திடீர் உடல்நலக் குறைவு; ஈவிகேஎஸ்...