×
Saravana Stores

நார்வே இளவரசி மகன் பலாத்கார வழக்கில் கைது

பெர்லின்: நார்வே நாட்டின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின். இவரது வளர்ப்பு மகன் மரியஸ் போர்க் ஹோய்பி. இவர் மீது பலாத்கார புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. உணர்வு இழந்த ஒருவருடன் அல்லது வேறு காரணங்களுக்காக அந்த செயலை எதிர்க்க முடியாமல் இருந்தவருடன் உறவு கொண்டதாக கூறிய போலீசார், பாலியல் பலாத்காரம் எப்போது நடந்தது என்று கூறவில்லை, ஆனால் இந்த குற்றச்சாட்டை போர்க் ஹோய்பி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காவலுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

The post நார்வே இளவரசி மகன் பலாத்கார வழக்கில் கைது appeared first on Dinakaran.

Tags : Princess ,Norway ,Berlin ,Crown Princess ,Mette-Maritine ,Marius Bourg Hoibi ,
× RELATED கொடைக்கானலில் பராமரிப்பின்றி உள்ள ரோஜா பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்