×
Saravana Stores

மத்திய காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு: லெபனானைத் தொடர்ந்து காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர மக்கள் வலியுறுத்தல்

காசா: மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். மிசோரியாட் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமிற்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் மசூதி மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதே போன்று ரபா எல்லை பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இடிபாடுகளில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 14 மாதங்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்துவரும் மோதலில் இதுவரை 44,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானை தொடர்ந்து காசாவிலும் போர்நிறுத்தம் கொண்டுவர அரபு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மக்களும் போர் நிறுத்தம் ஏற்படுமா என்று எதிர்பார்த்துள்ளனர்.

The post மத்திய காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு: லெபனானைத் தொடர்ந்து காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED அமெரிக்க புலனாய்வு அமைப்பான...