- கும்பகோணம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு
- கும்பகோணம்
- கும்பகோணம் நீதிமன்றம்
- அய்யப்பன் மகான் அருணராஜாய்
- காமராஜ்நகர்,
- தஞ்சாவூர் மாவட்டம்
- மேல் கபிஸ்தலம்
- காமராஜ் நகர்
- தின மலர்
*கும்பகோணம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கும்பகோணம் : வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேல கபிஸ்தலம், காமராஜ்நகரை சேர்ந்த அய்யப்பன் மகன் அருண்ராஜை, 2020 ஆக.12ம்தேதி 10பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தியதில், முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டார் என தெரிய வந்தது.
இதுதொடர்பாக பாரதியார் நகரை சேர்ந்த சிலம்பரசன் (35), இவரது தம்பி கவியரசன் (32), பாதிரிமேடு, கீழத்தெருவை சேர்ந்தவர்களான நவாஸ்குமார் (22), ராம்கணேஷ் (27), திருவைகாவூர், அண்ணா நகரை சேர்ந்த ஜீவா (43), மருத்துவக்குடி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த யோகராஜ் (30), பொன்பேத்தி புது காலனி தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (27), கடிச்சம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த சிவா (25), எருமைப்பட்டி, காலனி தெருவை சேர்ந்த நெப்போலியன் (26), கொந்தகை, காமராஜ் நகரை சேர்ந்த மணியரசன் (எ) முகமதுஆசிக் (25), ஓலைப்பாடி, கீழத்தெருவை சேர்ந்த பாரதிராஜன் (27), பேராவூரணியை சேர்ந்த கஜேந்திரன் (35) மற்றும் திருவாருர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த ரிச்சர்டு சாமுவேல் (27) ஆகியோர் 2020 டிச. 14ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, வழக்கின் குற்றவாளிகளான சிலம்பரசன், கவியரசன், நவாஸ்குமார், ராம்கணேஷ், ஜீவா, யோகராஜ், ரஞ்சித்குமார், சிவா, ரிச்சர்டு சாமுவேல், மணியரசன் (எ) முகமது ஆசிக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ₹1,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மற்ற குற்றவாளிகளான நெப்போலியன், பாரதிராஜன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜரானார். கும்பகோணம் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஒரே வழக்கில், ஒரே சமயத்தில் 10 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
The post வாலிபர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.