- யதாத்ரி புவனகிரி மாவட்டம்
- திருமலா
- தெலுங்கானா மாநிலம்
- யாததிரி புவனகிரி மாவட்டம்
- பி. பி. போதைப்பொருள்
- நகர் மண்டலம் குடும்ப டோல்
*120 கிலோ பறிமுதல்
திருமலை : யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் காரில் போதை மருந்து கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், யாதாதிரி புவனகிரி மாவட்டம், பீ.பி.நகர் மண்டலம் குடுரு டோல் பிளாசா வழியாக போதை மருந்து கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட ₹24 கோடி மதிப்புள்ள 100 கிலோ போதை மருந்தை போலீசார் பறிமுதல் செய்து அதில் வந்த 3 பேரை கைது செய்து விசாரித்தனர். அதில், அவர்கள். நெட்டி கிருஷ்ணா ரெட்டி, பைசான் அகமது மற்றும் சுனில் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் அளித்த தகவலின்படி போலீசார் யாதகிரிகுட்டா மண்டலம், ராமாஜிப்பேட்டையில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். அதில், அனுமதியின்றி தயாரித்த போதைப் பொருட்களை கடத்தி கொண்டு ஐதராபாத் வழியாக மும்பை கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த தொழிற்சாலையில் இருந்த மேலும் 20 கிலோ போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், போதை மருந்துகளை கடத்த முயன்ற வாசுதேவாச்சாரி, பானு பிரகாஷ், சத்தியநாராயணா, சல்மான் சலீம் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் காரில் போதை மருந்து கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.