×
Saravana Stores

அதானி மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க பாமக, பாஜ முயற்சி: முத்தரசன் கண்டனம்


சென்னை: சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், தொழில் அதிபருமான அதானி மீதும் அவரது குழும நிறுவனங்களின் அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசின் நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்தச் செய்தி வெளியானதும் அடுத்த வினாடியே தமிழ்நாடு அரசின் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி “அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை” என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வரும் “அதுபற்றி ஏற்கனவே துறையின் சார்பாக அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது என்று பொறுப்பாக பதில் அளித்துள்ளார். ஆனால் முதலமைச்சரின் பதில்களை பயன்படுத்தி பாமக, பாஜ அதன் பரிவாரங்கள் ஒரே குரலில் முழங்கி, அதானி மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரை மையப்படுத்தி லாவணி நடத்தி வரும் பாமக, பாஜ பரிவாரங்களின் நோக்கம் ஒரு போதும் நிறைவேறாது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அதானி மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க பாமக, பாஜ முயற்சி: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Blamaka ,Bhajj ,Adani ,Muttarasan ,Chennai ,CBI ,Secretary of State ,Mutharasan ,US government ,Justice Department ,Modi ,Bhamaka ,Bajaj ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மின் ஒப்பந்தம் வங்கதேசம் மறு ஆய்வு