×
Saravana Stores

குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தற்கொலை

 

திருப்பூர்,நவ.27: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி பானுப்பிரியா (29), இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர், குடும்ப பிரச்சனையால் குழந்தை மற்றும் கணவனை பிரிந்து திருப்பூர், ராக்கியாபாளையம் வள்ளியம்மை நகர் 5வது வீதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார். குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த பானுப்பிரியா பல நாட்களாக தனிமையில் வேதனையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று அவருடன் பணிபுரியும் பெண் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, பானுப்பிரியா வீடு உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது, வெகு நேரம் தட்டி திறக்காததால், சந்தேகம் அடைந்த அவரது தோழி மற்றவரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பானுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Periyaswamy ,Panupriya ,Attur ,Salem district ,Rakiyapalayam Valliammai Nagar ,
× RELATED திருப்பூர்-கோவை எல்லையில் வேளாண்...