×
Saravana Stores

கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் கட்டணமில்லா கழிவறைகள்: சிஎம்டிஏ கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை: எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைந்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில், அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில், 281வது குழும கூட்டம் நடந்தது. இதில், வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும், சட்டமன்ற கூட்டத்தொடரில் 2024-25ம் ஆண்டு அறிவித்த அறிவிப்புகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள 68 கழிவறைகள் மற்றும் 10 சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டணமில்லா கழிப்பிடமாக மாற்றப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவே உணவு தானிய அங்காடியில் 26 கழிவறைகள் கட்டணமில்லா கழிப்பிடமாக இருக்கும் நிலையில், தற்போது, அனைத்து கழிவறைகளும் (94 கழிவறைகள்) கட்டணமில்லா கழிப்பிடமாக செயல்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கோயம்பேடு வியாபாரிகள், நுகர்வோர் மற்றும் வாகன ஓட்டுநர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, குழும உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் கட்டணமில்லா கழிவறைகள்: சிஎம்டிஏ கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : CMDA ,Chennai ,Chennai Metropolitan Development Group Office Partnership ,Ramampur ,Dalamuthu Nadarasan Mansion ,Minister ,Chennai Metropolitan Development Group B. K. ,Sekarpapu ,281st Ensemble Meeting ,North Chennai ,Dinakaran ,
× RELATED ரூ.427 கோடியில் அமைக்கப்படும்...