- உச்ச நீதிமன்றம்
- அஇஅதிமுக
- -அமைச்சர்
- சி.வி ஷண்முகம்
- முதல் அமைச்சர்
- புது தில்லி
- முன்னாள்
- அமைச்சர்
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
புதுடெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம், 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களின்போது தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் ஆகியோரை நேரடியாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.வி.சண்முகம் இந்த விவகாரத்தில் தனது மன்னிப்பை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது.
மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அசானுதீன் அமனுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு மாநில முதல்வருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக பேசுவதா?. இந்த செயல்பாட்டால் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையை ஏன் ரத்து செய்யக் கூடாது? முதல்வரை தரம் தாழ்த்தி பேசும்போது அவதூறு வழக்கு பதியப்படுவது இயல்புதானே, எனவே அந்த வழக்கை சி.வி.சண்முகம் சந்திக்கட்டும்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்து, விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
The post முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவது அவதூறுதான் அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டம் appeared first on Dinakaran.