- அமைச்சர் KKSSR
- ராமச்சந்திரன்
- விருதுநகர்
- அமைச்சர்
- கே.கே.எஸ்.எஸ்.ஆர்
- விருதுநகர் மாவட்டம்
- குண்டாயிரு ஊராட்சி
- வெம்பகோட்டை
விருதுநகர்: டெல்டா மாவட்டங்கள் மழையால் எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பு ஊராட்சியில் திருநங்கைகளுக்கு ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் 21 தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் வீடுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.
பின்னர் அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கிற திருநங்கைகளுக்கு வாழ்வளிக்கிற எண்ணத்தோடு முதலமைச்சர் இந்த வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர ஆருயிர் என்ற பெயரில் டீக்கடையும் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு வரும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மழையால் எந்த விதத்திலும் மக்கள் பாதிக்காத வகையில் முகாம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.
The post மழையால் பாதிக்காத வகையில் டெல்டா மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தயார்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.