கடலூரில் நடந்த கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

கடலூர், நவ. 26: கடலூரில் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகர் சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் தினேஷ் பெஞ்சமின் மகன் ஜெய்வின் ஜோசப் (18). இவர் கடந்த 2020ம் ஆண்டு கொலை செய்யப்பட்டு கடலூர் உப்பனாறு பகுதியில் புதைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியான கடலூர் முதுநகர் மோகன் சிங் வீதியை சேர்ந்த காத்தவராயன் மகன் விஜய் (23) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவரை உடனடியாக கைது செய்ய கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் விஜய்யை தேடி வந்தனர். அப்போது அவர் ஒரிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் அச்சரப்பள்ளி கடலோர கிராமத்தில்தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், தலைமை காவலர்கள் நெப்போலியன், சிவக்குமார், முதல் நிலைக் காவலர் ஹரிகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கடலூரில் நடந்த கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: