போலியாக ரசீது தயாரித்து ₹1.45 கோடி மோசடி நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் வேலூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய விற்பனை மேலாளர்

வேலூர், நவ.23: வேலூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய விற்பனை மேலாளர் போலியாக ரசீது தயாரித்து ₹1.45 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 14 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எங்கள் நிறுவனத்தின் ஏரியா விற்பனை மேலாளராக கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒருவர் வேலூரில் பணியாற்றி வந்தார். அவருக்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை கவனித்து வந்தார். இந்த 5 மாவட்டங்களுக்கு வேலூர் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திருச்சியில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

எங்கள் அலுவலகத்திலிருந்து அவருக்கு தன்னுடைய கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியது. மேலும் நிறுவனத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் 30 நாட்கள் முன்பாகவே ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும் அவருக்கு என்பதனையும் வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பபட்டது. ஆனால் இது நாள் வரையில் கடிதத்தின் படி சமர்ப்பிக்கவில்லை நேரிலும் வரவில்லை. பிறகு என்னுடைய மேலதிகாரியின் உத்தரவு அவருக்கு கொடுக்கபட்ட 5 மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு நான் நேரில் சென்று கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது செய்த ₹98 லட்சத்து 54 ஆயிரத்து 527 ரூபாய் பணம் கையாடல் செய்ததுள்ளார்.

மேலும் நிறுவனத்தின் பெயரில் போலியாக ரசீது தயாரித்து ₹46 லட்சத்து 70 ஆயிரம் 616 ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. நேற்றுமுன்தினம் 21ம் தேதி இதை பற்றி அவரிடம் கேட்க முயற்சி செய்தபோது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யபட்டுள்ளது. மேலும், தாங்கள் விசாரிக்கும் போது அவர் கையாடல் செய்ததற்கான ஆதாரமும் மற்றும் அவர் போலியாக தயார் செய்த ரசீதுகளை தங்களிடம் உள்ளது. எனவே அவரை அழைத்து விசாரணை செய்து அவர் கையாடல் மற்றும் போலியாக ரசீது தயாரித்து எங்களுடைய நிறுவனத்துக்கு சேரவேண்டிய ₹1 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரத்து 143 ரூபாய் பெற்று தருமாறும், மேலும் கையாடல் மற்றும் போலியாக ரசீது தயாரித்தற்காக அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

The post போலியாக ரசீது தயாரித்து ₹1.45 கோடி மோசடி நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் வேலூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய விற்பனை மேலாளர் appeared first on Dinakaran.

Related Stories: