வேலூர், நவ.18: நிலத்தில் களை பறிக்கச் சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். வேலூர் காட்பாடி தாலுகா சஞ்சீவிராயபுரம் அடிவாரம் ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(85). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் சஞ்சீவிராயபுரத்தில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் தனது நிலத்தில் களை பறிக்கச் சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிந்தார்.
இதை பார்த்த பக்கத்து நிலத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக காட்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலி கிணற்றில் தவறி விழுந்து appeared first on Dinakaran.