விஜய்யுடன் கூட்டணின்னு எடப்பாடி சொன்னாரா?: கேட்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை: மதுரை விளாங்குடியில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள், ‘‘அதிமுகவுடன் விஜய் கட்சி கூட்டணி இல்லைன்னு மறுத்து விட்டனரே’’ என்றனர். இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ‘‘எடப்பாடி பழனிசாமி கூட்டணின்னு சொன்னாரா? தம்பி நான் சொல்றத கேளுங்க… சமூக வலைத்தளங்களில் ஆயிரம் பேசுவாங்க தம்பி, எங்க பொதுச்செயலாளர் சொன்னாரா? விஜய் சொன்னாரா? நான் கேட்கிறேன். நீங்கதான் கேள்வி கேட்டீங்க, இந்த 2க்கும் பதில் சொல்லுங்க.. நான் பலமுறை ஊடகங்களை சந்திக்கும்போது சொல்லி இருக்கேன்.

விஜய் கட்சி ஆரம்பிக்கிறது எங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோசம். ஆயிரம் பேர் பேசுவாங்க. ஆயிரத்துக்கும் பதில் சொல்ல முடியுமா?’’ என்றார்.‘‘திண்டுக்கல் சீனிவாசன், கூட்டணிக்கு வருபவர்கள் சீட்டும், பணமும் கேட்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளாரே?’’ என்று கேட்டதற்கு, ‘‘செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆயிரம் பேசுவாங்க. நாம் வலுவாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் திண்டுக்கல் சீனிவாசன் சொல்லி இருக்கிறார்’’ எனக்கூறி சமாளித்தார்.

 

The post விஜய்யுடன் கூட்டணின்னு எடப்பாடி சொன்னாரா?: கேட்கிறார் செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Related Stories: