சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: மதுரை மேலூர் வட்டத்திற்குட்பட்ட நாயக்கர்பட்டியில் 2015.51 எக்டேர் நிலப் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை வேதாந்த நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசின் சுரங்க அமைச்சகம் வழங்கியுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தினை தடுக்கும் வண்ணமும், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்.
The post ‘மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது’ appeared first on Dinakaran.