- ஆபரேஷன் சீ விஜில்
- ராமேஸ்வரம் தீவு
- ராமேஸ்வரம்
- ராமேஸ்வரம் பம்பன் முயல்தி
- இந்திய கடற்படை
- கடலோர காவல்படை
- மரைன் போலீஸ்
- மீன்பிடி துறை
- பக்ஜலஸந்த்
- மன்னார் வளைகுடா கடல்
- தின மலர்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் முயல்தீவில் நடந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகையின்போது 7 டம்மி தீவிரவாதிகள் பிடிபட்டனர். பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக ஆண்டுதோறும் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீஸ், மற்றும் மீன்வளத்துறை இணைந்து ஆபரேஷன் சீ விஜில் என்ற கடல் கண்காணிப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று தமிழக கடலோரப் பகுதிகளில் ‘ஆபரேஷன் சீ விஜில்’ ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையின்போது டம்மி தீவிரவாதிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் ஒத்திகையில் பிடிப்பது வழக்கமானது.
இதையடுத்து ராமேஸ்வரம் தீவில் தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் துவங்கி நடைபெற்ற ஆபரேஷன் சீ விஜில் ஒத்திகையில் காவல்துறையினர், சுங்கத்துறை அதிகாரிகள், வனத்துறையினர் இணைந்து ஆயத்த நிலையில் இருந்தனர். ராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா கடற்பகுதியில் 4 பேர் கொண்ட குழு படகில் ஊடுருவ முயன்றபோதும், முயல்தீவில் பதுங்கியிருந்த 3 பேர் என 7 டம்மி தீவிரவாதிகளை மரைன் போலீசார் பிடித்தனர். இந்த ஆபரேஷன் சீ விஜில் ஒத்திகை இன்று இரவு நிறைவடையும்.
The post ராமேஸ்வரம் தீவு பகுதியில் ஆபரேஷன் சீ விஜில் ஒத்திகை: 7 டம்மி தீவிரவாதிகள் சிக்கினர் appeared first on Dinakaran.