×
Saravana Stores

ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: கோயிலைச் சூழ்ந்தது வெள்ளம்


ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் கோயில் ரதவீதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடரேலார மாவட்டங்களில் பரவலான மழையும், மற்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட கடலோர தீவுப் பகுதிகளில் நேற்று பகலில் இருந்து மாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால், ராமேஸ்வரம் தீவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திட்டக்குடியில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலை மற்றும் ராமநாதசுவாமி கோயில் உள்ள ரதவீதிகளில் மழைநீர் வெள்ளம் போல ஆறாக ஓடியது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், வாகனங்களில் வந்து சென்ற சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் சிரமம் அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பதிவான மழை அளவு (மி.மீ): நேற்று பாம்பனில் அதிகப்பட்சம்-22, தங்கச்சிமடம்-21. மண்டபம் 18.6, ராமேஸ்வரம-5. ராமேஸ்வரத்தில் தீவில் நேற்று ஒரே நாளில் 4.8 செ.மீ மழை பெய்துள்ளது.

The post ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: கோயிலைச் சூழ்ந்தது வெள்ளம் appeared first on Dinakaran.

Tags : Rameshwar ,Rameshwaram ,Rameshwaram island ,Tamil Nadu ,
× RELATED ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை பதிவு