நரசிங்கபுரத்தில் கட்டி முடித்து 2 ஆண்டாகியும் பயன்பாட்டுக்கு வராத எரிவாயு தகன மேடை: குடிமகன்களின் கூடாரமாக மாறுவதை தடுக்க எதிர்பார்ப்பு

நரசிங்கபுரம்:சேலம் நரசிங்கபுரம் நகராட்சியில் எரிவாயு தகனமேடை கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் பல்வேறு சிரமங்கள் தொடர்ந்து வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள நகராட்சிகளில் ஒன்றாக இருப்பது நரசிங்கபுரம். மொத்தம் 18வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் உள்ள மயானத்திற்கு எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என்பது பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு 4வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1.40 கோடியில் எரிவாயு தகனமேடை கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் இந்த எரிவாயு தகனமேடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் எரிவாயு தகனமேடை
மெல்ல,மெல்ல சிதைந்து வருகிறது. தகனமேடையின் முன்பகுதி ேகட் உடைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க அந்த பகுதி, குடிமகன்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நரசிங்கபுரம் 4வது வார்டுக்கு உட்பட்ட என்.வி.நகரில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் யாராவது இறந்துவிட்டால் அருகில் உள்ள இந்த மின்மயானத்தை பயன்படுத்த முடிவதில்லை. இதனால் நரசிங்கபுரத்தில் இருந்து ஆத்தூருக்கு செல்லவேண்டியுள்ளது. சுமார் 5கிலோ மீட்டர் பயணித்து ஆத்தூரில் உள்ள எரிவாயு தகனமேடைக்கு சடலத்தை கொண்டு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு தான், என்.வி.நகர் மயானத்தில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது. ஆனால் உரிய காலத்தில் திறக்காததால் பயனின்றி கிடக்கிறது.தற்போது சிலர், மயானத்தின் திறந்தவெளியில் வைத்து சடலங்களை எரித்து வருகின்றனர். இந்த எரிவாயு தகனமேடையை மக்கள் பயன்படுத்தினால் நகராட்சிக்கும் குறிப்பிட்ட வருவாய் வரும். ஆனால் இதில் உரிய கவனம் செலுத்தாததால் தகனமேடை குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.தற்போது சிலர், மயானத்தின் திறந்தவெளியில் வைத்து சடலங்களை எரித்து வருகின்றனர்.

இதனால் பலத்த துர்நாற்றமும் வீசுகிறது. இந்த எரிவாயு தகனமேடையை மக்கள் பயன்படுத்தினால் நகராட்சிக்கும் குறிப்பிட்ட வருவாய் வரும். ஆனால் இதில் உரிய கவனம் செலுத்தாததால் தகனமேடை குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற செயல்களும் திறந்த வெளியில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இது அந்த வழியாகச் செல்லும் மாணவ, மாணவிகளையும், பெண்களையும் முகம் சுழிக்க வைக்கிறது. இதுபோன்ற அவலங்களுக்கு தீர்வு காணும் வகையில் எரிவாயு தகனமேடை மயானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று தொடர்ந்து அதிகாரிகளிடம் ேகாரிக்கை வைத்து வருகிறோம். இதற்குரிய நடவடிக்கையை அதிகாரிகள் விரைந்து எடுத்து, தொடரும் அவலங்களுக்கு தீர்வு காணவேண்டும்.இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

The post நரசிங்கபுரத்தில் கட்டி முடித்து 2 ஆண்டாகியும் பயன்பாட்டுக்கு வராத எரிவாயு தகன மேடை: குடிமகன்களின் கூடாரமாக மாறுவதை தடுக்க எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: