வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை : ஒசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொழில்ரீதியானது அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் பார் கவுன்சில் முறையீடு செய்துள்ளது. தலைமை நீதிபதி அமர்வில் இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் பிரபாகரன் முறையீடு செய்தார். இந்த வழக்கில், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: