சிவகாசி, நவ.21:சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கணேஷ்பாண்டி(37). கிடைக்கும் சம்பள பணத்தை மது அருந்தி செலவழித்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கணேஷ் பாண்டி பூச்சி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.