நெல்லை,நவ.21: முன்னீர்பள்ளத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் ைகது செய்தனர். மேலப்பாளையம் மேலகருங்குளம் பாவேந்தர் தெரு வை சேர்ந்தவர் முருகன் மகன் மகாராஜா (25). இவர் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வேண்டுகோளின் படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் படி போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.