×
Saravana Stores

மாநகராட்சி கமிஷனர் பெயரில் போலி கணக்கு

சேலம், நவ.21: சேலம் மாநகராட்சி கமிஷனர் பெயரில் இன்ஸ்டா, பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கிய மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் சைபர் கிரைம் டோல் ப்ரீ எண்ணிற்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயரில் (ரஞ்ஜீத் சிங்) இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், பேஸ்புக் ஆகிய பக்கங்களில் போலியாக மர்மநபர்கள் கணக்கு தொடங்கியுள்ளனர்.

அதில் அவர்கள் பல்வேறு கருத்துக்களை எனது பெயரில் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், பேஸ்புக் ஆகிய பக்கங்களில் மாநகராட்சி கமிஷனர் பெயரில் போலியாக கணக்குகளை தொடங்கிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாநகராட்சி கமிஷனர் பெயரில் போலி கணக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Instagram ,Facebook ,Salem Corporation ,Commissioner ,Ranjeet Singh ,Corporation Commissioner ,Dinakaran ,
× RELATED சேலம் மாநகராட்சி ஆணையர் பெயரில் போலி...