×
Saravana Stores

சத்திரம் கூட்ஸ் ஷெட்டிற்கு 2,600 டன் சிமெண்ட், உரம் வந்திறங்கியது

 

சேலம், நவ.18: சேலம் செவ்வாய்பேட்டை சத்திரத்தில் உள்ள ரயில்வே கூட்ஸ் ஷெட்டிற்கு, வட மாநிலங்களில் இருந்து கோதுமை, உரம், கோழித்தீவனம், பருப்பு உள்ளிட்ட தானியங்களும், ஆந்திராவில் இருந்து சிமெண்ட்டும், சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படுகிறது. அதனை லாரிகளில் ஏற்றி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். நேற்று காலை, ஆந்திராவில் இருந்து தனி சரக்கு ரயிலில் 1,300 டன் சிமெண்ட் லோடு வந்தது. அதனை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி தனியார் குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், மகாராஷ்டிராவில் இருந்து 1,300 டன் யூரியா உரம் வந்தது. அதனை இறக்கி, லாரிகளில் ஏற்றி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். வரும் நாட்களில், சிமெண்ட் லோடு அதிகளவு வர இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post சத்திரம் கூட்ஸ் ஷெட்டிற்கு 2,600 டன் சிமெண்ட், உரம் வந்திறங்கியது appeared first on Dinakaran.

Tags : Satram Goods ,Salem ,Andhra ,Sathram Goods Shed ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது