×

கோவையில் வக்கீல்கள் 2 நாள் கோர்ட் புறக்கணிப்பு

கோவை, நவ. 21: தமிழ்நாடு-புதுவை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் இன்றும், நாளையும் (வியாழன், வெள்ளி) கோர்ட்டுகளை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். ஓசூர் நீதிமன்றம் அருகே நேற்று வக்கீல் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்ைத ஒன்றிய அரசும், மாநில அரசும் உடனடியாக நிறைவேற்றக்கோரியும் இப்போராட்டம் நடக்கிறது. கோவை மாவட்டத்திலும் வக்கீல்கள் இன்றும், நாளையும் முழு அளவில் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டத்தில் வக்கீல்கள் முழு அளவில் கலந்து கொள்வார்கள் என கோவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

The post கோவையில் வக்கீல்கள் 2 நாள் கோர்ட் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu ,Tamil Nadu-Puduvai Vakiels Sangh Federation ,Kannan ,Hosur ,Dinakaran ,
× RELATED மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி