- திருப்பூர்
- கருப்பசாமி
- கோபி வாய்க்கால் மேடு
- ஈரோடு மாவட்டம்
- நீர் மற்றும் வடிகாலமைப்பு சபை
- பட்டா
- குன்னத்தூர்
- திருப்பூர் மாவட்டம்
- சுண்டகாம்பாளையம்
- கோபி?. திருக்குறள்
- தின மலர்
திருப்பூர்: ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (55). குடிநீர் வடிகால் வாரிய ஊழியர். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சுண்டக்காம்பாளையம் மற்றும் கோபி அருகே உள்ள தனது 2 நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், கிராம ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யவும் தடையின்மை சான்று கேட்டு 2007ல் குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக சார்பதிவாளர் சந்திரசேகரன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கடந்த 12-6-2007ல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் 17 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரசேகரனுக்கு (தற்போது வயது 69) 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை நேற்று தீர்ப்பளித்தார்.
The post ரூ.10,000 லஞ்சம் சார்பதிவாளருக்கு 17 வருடத்துக்கு பின் 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.