×
Saravana Stores

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு சிறை 12 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக். 22ம் தேதி கடலுக்குச் சென்ற 2 விசைப்படகுகளையும், 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. சிறைக்காவல் நேற்று முடிந்ததால், 16 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 12 மீனவர்கள் மீண்டும் பிடிபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட 2 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, விசைப்படகு உரிமையாளரே படகின் ஓட்டுநராக சென்றதால் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை, மற்றொரு விசைப்படகு ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட 12 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு சிறை 12 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram Fishing Port ,Sri Lankan Navy ,Jaffna ,
× RELATED இலங்கை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை...