சென்னை: கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நடப்பு நிதியாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வீடுகளின் கட்டுமான பணிகளும் நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டுக்குள் வீடுகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ஏற்கனவே ரூ.800 கோடி விடுவிக்கபப்ட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு தலா ரூ.3.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி தரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வரை 15,350 பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டுக்குள் முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திம்-IIல் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 53,779 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. திட்டத்துக்கு ஏற்கனவே ரூ.150 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
The post கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நடப்பு நிதியாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.