மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது. அதேபோல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 13-ம் தேதி முடிவடைந்தது. மீதம் இருந்த 38 தொகுதிகளுக்கு இன்று (20-ம் தேதி) வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த நிலையில், இரண்டு மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும் கருத்துகணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில்:
பாஜக கூட்டணிக்கு 150-170 இடங்கள் வரை கிடைக்கும்; இந்தியா கூட்டணிக்கு 110-130 இடங்கள் வரை கிடைக்கும் என ஏ.பி.பி. கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.என் கருத்துக்கணிப்பில், பி.மார்க் கருத்துக்கணிப்பின் படி மராட்டியத்தில் பாஜக கூட்டணிக்கு 154 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு; இந்தியா கூட்டணிக்கு 128 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு என கூறப்படுகிறது.
பாஜக கூட்டணிக்கு 175-195 இடங்கள் வரை கிடைக்கும்; மராட்டியத்தில் இந்தியா கூட்டணி 85-112, பிற கட்சிகளுக்கு 7-12 வரை இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட்டில்:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 44 53 இடங்கள் வரை கிடைக்கும்; ஜே.எம்.எம். கூட்டணிக்கு 25-37 இடங்கள் வரை கிடைக்கும் என பீப்பிள்ஸ் கருத்துகணிப்பில் கூறப்படுகிறது.
சி.என்.என்.- பி.மார்க் கருத்துக்கணிப்பின்படி ஜார்க்கண்டில் பாஜக கூட்டணிக்கு 45 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு JMM கூட்டணிக்கு 33 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 40-44, இந்தியா – கூட்டணி 30-40 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் கணிப்பு கூறுகிறது.
The post மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.