×
Saravana Stores

கோத்தகிரி அருகே மண் வீடுகளில் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் வசித்து வரும் பழங்குடியின மக்கள்

 

கோத்தகிரி, நவ.20: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அணில் காடு பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு குரும்பர் பழங்குடியை சேர்ந்த 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இவர்கள் மண் சுவரால் கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக வசித்து வருவதால் தற்போது இவர்களின் குடியிருப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது.
மூங்கில் மற்றும் கற்களை கொண்டு வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாததால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மத்தியில் வாழ்வதால் கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. மண் வீடுகள் என்பதால் கன மழை காலங்களில் வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் பெரும்பாலும் காப்பி மற்றும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

பலர் வேறு இடங்களுக்கு சென்று தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். அணில் காடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி அருகே மண் வீடுகளில் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி அருகே மீண்டும் மீண்டும் உலா வரும் சிறுத்தை