×
Saravana Stores

கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜி என்பவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார். அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் பாலாஜி சிகிச்சை பெற்று வந்தார்.

கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று டாக்டர் பாலாஜி வீடு திரும்பினார். பாலாஜியை சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் 6 அல்லது 7 நாட்களுக்கு பிறகு டாக்டர் பாலாஜி உடலில் இருக்கும் காயத்தை பரிசோதனை செய்த பிறகு தையல் பிரிக்கப்படும் என மருத்துவமனை முதல்வர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

The post கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்தில் காயமடைந்த டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Balaji ,Guindy ,Hospital ,Chennai ,Perungalathur ,Chennai's Kindi Artist Centenary Special Hospital ,
× RELATED தனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் பாலாஜி கூறும் வீடியோ வெளியீடு!