நாமக்கல், நவ.20: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹3 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகள் 152 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவினாசி, கொங்கணாபுரம், ராஜபாளையத்தை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ₹7369க்கும், மட்டரகம் குவிண்டால் ₹4899 க்கும் ஏலம் போனது. ₹3 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி அறுவடை சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் சங்கத்துக்கு குறைந்த அளவே கடந்த 4 வாரமாக பருத்தி மூட்டைகள் வருகிறது. டிசம்பர் மாத இறுதியில் புதிய பருத்தி வரத்து அதிகரிக்கும் என சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.
The post நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹3 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.