திருச்செங்கோடு, நவ.19: திருச்செங்கோட்டின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான அம்மன் குளத்திற்கு கம்பிவேலி அமைத்து, கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சிக்கு விடப்பட்டது. இந்நிலையில், சமூக விரோதிகள் சிலர், அம்மன் குளத்தில் இருந்த கிரானைட் பெஞ்சுகளில் இருந்த பலகைகளை திருடிச் சென்று விட்டனர். மேலும், குளத்தில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளது. அதனை நகராட்சி கமிஷனர் அருள் பார்வையிட்டார். பின்னர், கரையை சுற்றியுள்ள முள் மரங்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்றுவது குறித்தும், ஆகாயத்தாமரைகளை அழிப்பது குறித்தும், நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் உதவி பொறியாளர் செந்தில்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார். விரைவில் அம்மன் குளம் தூய்மைபடுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.