- திமுக
- Senthamangalam
- இராமலிங்கம் சட்டமன்ற
- புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம்
- பாபிநாயக்கன்பட்டி
- தாளம்பாடி
- செல்லப்பம்பட்டி
- மின்னாம்பள்ளி
- உடும்பம்
- கரடிப்பட்டி
- கலங்காணி
- தத்தத்ரிபுரம்
- காரைக்குறிச்சி
- காரைக்குறிச்சி
சேந்தமங்கலம், நவ.18: புதுச்சத்திரம் தெற்கு ஒன்றி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டத்தில் ராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்று ஆலோசனை வழங்கினார். புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி, தாளம்பாடி, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, எஸ்.உடும்பம், கரடிப்பட்டி, களங்காணி, தத்தாத்ரிபுரம், காரைக்குறிச்சி, காரைக்குறிச்சி புதூர், ஏளூர் ஆகிய 11 ஊராட்சிகளில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். ராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலை வகித்தார் கூட்டத்தில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் முனவர் ஜான் கலந்துகொண்டு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை சரிபார்த்தார். ராமலிங்கம் எம்எல்ஏ பேசுகையில், வாக்குச்சாவடி முகவர்கள் தான் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். செயல்பட முடியாத வாக்குச்சாவடி முகவர்களை நீக்கிவிட்டு அப்பகுதி திமுக நிர்வாகிகள் புதிய வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
The post திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.