×
Saravana Stores

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மக்னா யானை

கூடலூர்: கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோக்கால் ஒன்றரை சென்ட் காலனி குடியிருப்பு பகுதிக்குள் இன்று காலை நுழைந்த ஓவேலி மக்னா காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த யானை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து நடமாடி வருகிறது. வனத்துறையினர் விரட்டினாலும், அது அடர்வனப் பகுதிக்குள் செல்வதில்லை.

கிராமங்களை ஒட்டிய சிறு வனப்பகுதிக்குள் சென்று பகலில் ஓய்வெடுத்து விட்டு, யானை மீண்டும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகிறது. இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் ஒன்றை சென்ட் காலனி குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை புகுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவயிடத்துக்கு விரைந்து வந்த வனச்சரகர் வீரமணி தலைமையிலான வனக் குழுவினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

The post கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மக்னா யானை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kokal One and a Half Cent Colony ,Kudalur Municipality ,Nilgiri District ,Dinakaran ,
× RELATED இரவு முழுவதும் காவல் காத்தாலும்...