சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும் ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர்கொண்டனர். இதில் குறிப்பாக 24.45 கி.மீ நீளத்திற்கு பொது பயன்பாட்டில் உள்ள (உயர்மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால்.,) போன்ற பயன்பாடுகளை மாற்று வழியில் செயல்படுத்துதல் மற்றும் 1,200 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதை போன்ற முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வழித்தட தூண்கள் அமையவுள்ள இடங்களை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் 1,500 மி.மீ. நீளத்திற்கு நீர்வழிப்பாதையை நீர் விநியோகத்திற்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக மாற்று வழியில் செயல்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொதுமேலாளர் திரு.எஸ்.அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), GC2-AEON நிறுவனத்தின் குழுத் தலைவர் திரு. முருகமூர்த்தி, L&T நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.ஜெயராமன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post கோடம்பாக்கம் – போரூர் இடையேயான உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் 100% முடிந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.