சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த பட்ஜெட்டில் ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.4 ஆயிரம் வரை சரிந்தது.
அதன்பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைவதும் கூடுவதுமாக இருந்தது. ஆனாலும் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இஸ்ரேல் – காசா போர், இஸ்ரேல் – ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 56,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,065 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520க்கு விற்பனை.! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் appeared first on Dinakaran.